அமெரிக்க எல்லைக்குள் நுழையும் அகதிகளுக்கு அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவில் தஞ்சமடைபவர்கள் தொடர்பாக அமெரிக்காவின் புதிய அரசு அவுஸ்திரேலிய பாணியிலான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சு சுட்டிக்காட்டுகிறது.

கவுதமாலா நாட்டில் மத்திய அமெரிக்க குடியேறிகளைக் குறிக்கும் விதமாக பேசிய கமலா ஹாரிஸ், “(அமெரிக்காவுக்கு) வர வேண்டாம், வர வேண்டாம். அமெரிக்காவுக்கு புலம்பெயர்வதற்கு என்று சட்ட முறைகள் உள்ளன. நாங்கள் சட்டவிரோத புலம்பெயர்வை வரவேற்பதில்லை. அமெரிக்கா எல்லைக்குள் வந்தால் நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள்,” என அவர் கூறியுள்ளார்.