அமெரிக்க ஊடகங்கள் மீது பைடன் சீற்றம்

அமெரிக்க ஊடகங்கள் மீது பைடன் சீற்றம், காசாவில் வைத்தியசாலை மீதான தாக்குதல் குறித்து வோஸ் ஸ்ரீற் ஊடகம் வெளியிட்ட தகவலால் சினமடைந்த பைடன் ஊடகவியலாளர்களை வெள்ளைமாளிகையின் ருசேவெல் அறைக்கு அழைத்து செய்திக்கான ஆதாரத்தை கேட்டதுடன்,  காசா வைத்தியசாலை மீதான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டதாக தகவல் வெளியிடுவது அமெரிக்காவில் இருந்து என்பதனை மறந்துவிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் இஸ்ரேலின் ரெல் அவிவ் நகரத்தின் பகுங்கு குழியில் இருந்து இஸ்ரேலின் தரைத்தாக்குதலை வழிநடத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தரைப்படை மற்றும் கடற்படை கட்டளை அதிகாரிகள் இஸ்ரேலின் கட்டளை அதிகாரிகளுடன் அங்கு தங்கியிருந்து நடவடிக்கைளை வழிநடத்துகின்றனர்.

காசாவின் வடக்கு பகுதியில் உள்ள பெயிற் ஹனொன் பகுதி உட்பட பல பகுதிகளில் இஸ்ரேலிய படையினர் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையில் இரண்டு கவச மற்றும் காலாட் படை டிவிசன்களை சேர்ந்த 20000 துருப்புக்கள் பயன்படுத்தப்படுதவாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட அக்சியோஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஓக்டோபர் இடம்பெற்ற தாக்குதலில் தமது படையினர் தரப்பில் 315 பேர் கொல்லப்பட்டதுடன், 240 பேர் ஹமாஸிடம் பணயக்கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.