அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் 19ஆவது ஆண்டு நினைவு நாள்

341 Views

அமெரிக்காவிலுள்ள இரட்டைக் கோபுரத்தின் மீது 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் நடத்தப்பட்டு இன்று 19ஆவது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அமெரிக்காவில், 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் 19ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிப்பதில், கொரோனா பேரிடர் காரணமாக ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படும் நிகழ்வில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 6 மாத காலமாக கொரோனா பேரிடர் காரணமாக மூடப்பட்டிருந்த செப்டெம்பர் 11 நினைவிடமும் அருங்காட்சியகமும், தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர் மட்டும் அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. சனிக்கிழமை அனுமதி பெற்றவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நினைவிடத்தில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகியோர் வெவ்வேறு நேரத்தில் அஞ்சலி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் அனைத்தும் நினைவிட பிளாஸா மற்றும் அதனை ஒட்டியிருக்கும் இடத்தில் நடத்தப்படுகின்றது.

Leave a Reply