அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதி

411 Views

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று(23) ஜோ பிடனைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

19 வயதான அலெக்சான்டர் ஹிலல் டிரெய்ஸ்மேன் என்னும் இளைஞர் மீது காவல்துறையினர் கொலை செய்ய முயன்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். அவர் ஒரு வான் வண்டி நிறைய துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் பிடிபட்டுள்ளார்.

இவர் அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் அவர் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கொல்ல திட்டமிட்டிருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply