அமெரிக்காவில் 9 இலட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு

280 Views

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த நாளிலிருந்து துவரை 9,20,000 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் குழந்தைகள் நல மையம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளின் கூட்டமைப்பு இணைந்து வெளியிட்ட புள்ளி விபரத்தில், கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி முதல் நவம்பர் 05ஆம் திகதி வரை 73,883 குழந்தைகளுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் இந்த அளவிற்கு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இது 17 சதவீதம் அதிகமாகும் என்றும் கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 9,27,518 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரு லட்சம் குழந்தைகளில் மேற்கொண்ட பரிசோதனையில் 1,232 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply