அமெரிக்காவில் தற்போது நடப்பது ‘சதி முயற்சியா’? – மங்கள

556 Views

அமெரிக்காவில் தற்போது அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் ஒரு சதி முயற்சியை போன்று இருப்பதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நடந்த வாரம் அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தனக்கு சார்பாக  2.7 மில்லியன் வாக்குகள் அழிக்கப்பட்டதாக தற்போதைய டிரம்ப் ஆதாரமின்றி குற்றம்சாட்டியிருந்தார். இந்த தேர்தலில் ஏற்கெனவே அதிபர் பதவிக்குத் தகுதி பெற தேவைப்படும் 270 தேர்தல் சபை வாக்குகளை விட அதிகமான இடங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக முன்னிலை நிலவரம் கூறுகிறது. இருப்பினும் சில மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிவுகள் இன்னும் முழுமையாக வெளி வரவில்லை.

இதனால், தேர்தலில் தான் தோல்வி அடைந்ததாக அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். இருப்பினும், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை அங்கீகரித்து பல நாடுகளின் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,ஆசியாவில் அல்லது ஆபிரிக்க தேர்தலில் தோல்வியுற்ற அதிபர் ஒருவர் அதனை ஏற்க மறுத்திருந்தால் ஜனநாயக நாடுகளில் இருந்து பெரும் கண்டனங்கள் எழுந்திருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்போது அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் விடயங்களை ஒரு ‘சதி முயற்சி’ என்றே வர்ணிக்கத் தோன்றுகின்றது.

எனவே இப்போது அமெரிக்காவின் நட்பு நாடுகள் ‘போதும்’ என்பதை ட்ரம்புக்கு வலுவாகவும் சத்தமாகவும் எடுத்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply