அனைத்து தடுப்பு முகாம்களையும் மூடுங்கள்: அவுஸ்திரேலியாவில் போராட்டம்

235 Views
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் பார்க் விடுதிக்கு வெளியே கூடிய அகதிகள் நல ஆர்வலர்கள் தடுப்பில் அனைவரையும் விடுவிக்க வேண்டும், அனைத்து தடுப்பு முகாம்களையும் நிரந்தரமாக மூட வேண்டும் என பேரணி நடத்தப்பட்டுள்ளது.
Campaign Against Racism and Fascism சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த பேரணியில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். அண்மையில் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட Fanoush மற்றும் Imran என்ற அகதிகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply