அகதிகளை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கும் மலேசியா- ஐ.நா தகவல்

208 Views
மலேசியாவில் ஓராண்டுக்கு மேலாக சிறைப்படுத்தப்பட்டுள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சந்திக்க மலேசிய அரசு அனுமதி மறுப்பதாக ஐ.நா. அகதிகள் முகமை கவலைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தஞ்சக்கோரிக்கையாளர்களை சந்தித்து எவருக்கு அகதி அந்தஸ்து வழங்கலாம் என்பதை தீர்மானிக்கும் விதமாக ஐ.நா.அகதிகள் முகமைக்கு அகதிகளை சந்திப்பதற்கான அனுமதியை மலேசிய அரசு வழங்கி வந்தது.
ஆனால், குடியேற்றக்கு(Immigration) நிலைப்பாட்டை இந்தாண்டு கடுமையாக்கியது முதல் அகதிகளை சந்திப்பதற்கான அனுமதியை மலேசிய அரசு மறுத்து வருவதாகக் கூறப்படுகின்றது.

Leave a Reply