அகதிகளை காலவரையின்றி சிறைப்படுத்தும் அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம்

அவுஸ்திரேலிய அரசு புலம்பெயர்வு சட்டத்தில் Migration Amendment (Clarifying International Obligations for Removal) Bill 2021 ஏற்படுத்தியுள்ள புதிய திருத்தம், அகதிகளை வாழ்நிலை முழுதும் காலவரையின்றி சிறைவைக்கும் ஆபத்து உடையது என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இந்த சட்டத் திருத்தம், அவுஸ்திரேலிய அரசு அகதிகளின் கோரிக்கைகளை இரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது. அதே சமயம், சொந்த நாட்டில் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ள அகதிகளை நாடுகடத்தும் அனுமதியை வழங்க மறுப்பதால், விசா இரத்து செய்யப்பட்ட அகதிகள் காலவரையின்றி சிறைப்படுத்தப் படுவார்கள் எனச் சொல்லப்படுகின்றது.