கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு;காலனிய பெல்ஜியத்தின் கறைபடிந்த கைகள்-தமிழில் ஜெயந்திரன்

பெல்ஜியத்தின் அரசராக விளங்கிய இரண்டாம் லியோபோல்ட், ஹிட்லரைப் போன்ற ஒரு மனிதப் படுகொலையாளியா அல்லது சில அநீதிகள் மட்டில் கண்ணை மூடிக்கொண்டிருந்த ஆட்சியாளனா? தனது காலனித்துவ கடந்த காலத்துக்கு முகங்கொடுக்கும் ஒரு நாட்டில், ஒரு புதிய புத்தகம் ஒரு புதிய சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது.

பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸில் சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் மறைந்து கொண்டிருக்கும் சூரியனின் மங்கும் கதிர்கள் விக்ரோறியன் காலத்தில் லேக்கனில் உள்ள அரச மாளிகையில், தாவரங்களைப் பாதுகாப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட மிகவும் அழகிய பசுமை வீடுகளின் கூரைகளில் பட்டுப் பளபளத்துக் கொண்டிருந்தன.

ஆபிரிக்காவின் கொங்கோவிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், இரண்டாவது லியோபோல்ட் மன்னனால் சேகரிக்கப்பட்ட தாவரங்களைக் காட்சிப்படுத்துவதற்காகக் கட்டப்பட்ட இந்தப் பசுமை வீடுகள் அரை மைலுக்கும் மேலான தூரத்துக்கு நீண்டிருக்கின்றன. அதே சமயத்தில் ஒரு காலத்தில் பெல்ஜியத்தை விட அறுபது மடங்கு பெரிதாக இருந்த ஆபிரிக்கப் பேரரசின் பகட்டானதும், பார்க்கக் கூடியதுமான அடையாளங்களாக இந்தப் பசுமை வீடுகள் விளங்குகின்றன.

வரலாற்றில், ஒரு தனி மனிதன் தனக்கென உருவாக்கிய பெரு நிலமாக இந்தக் காலனி திகழ்ந்தது. அரசன் ஒருபோதுமே அதனைப் போய்ப் பார்க்கவில்லை.1 கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு;காலனிய பெல்ஜியத்தின் கறைபடிந்த கைகள்-தமிழில் ஜெயந்திரன்

தனது மருமகனுக்கு இந்த பசுமை வீடுகளை அரசன் காண்பித்த பொழுது, அந்த இளைஞனோ, இது சிறிய வேர்சாய் (பிரான்சில் உள்ள 16ம் லூயி மன்னனின் கோட்டை) போல இருக்கிறது எனப் பதிலளித்தான். மருமகன் அவற்றை ‘சிறியவை’ என்று கூறியது அரசனுக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.

லியோபோல்ட் எதையெடுத்தாலும் பெரிதாகவே யோசிப்பார். ஆனால், ஆபிரிக்கப் பிரதேசங்களை மிகவும் மோசமான விதத்தில் கையாண்ட அரசனின் கையாள்கை தொடர்பான சர்ச்சை, மிகவும் கொடூரமான காலனித்துவ கடந்த கால வரலாற்றைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இன்றும் உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற ஒரு விடயமாகவே இருக்கிறது.

நாசிகளால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையான ஆபிரிக்க மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த கூரிய தாடியைக் கொண்டவரும் மிகவும் மோசமான குண இயல்புகளைக் கொண்டவருமான லியோபோல்ட், அண்மைக்காலத்தில், முதல் இனப்படுகொலையை நிகழ்த்திய ஒரு கொலையாளியா என்பதே, தற்போது அனைவராலும் முன்வைக்கப்படும் வினாவாகும்.6 கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு;காலனிய பெல்ஜியத்தின் கறைபடிந்த கைகள்-தமிழில் ஜெயந்திரன்

கொன்றாட் என்பவரால் எழுதப்பட்ட ‘இருளின் இதயம்’ என்ற ஆக்கத்துக்கும் மனிதத் தலைகளைத் தனது தோட்டத்தில் தொங்கவிட்ட கொடூரனான கேட்சுக்கும் களம் அமைத்துக் கொடுத்த பூமத்திய ரேகையில் அமைந்திருந்த அவரது ஏகாதிபத்தியத்தில் நடந்த படுகொலைகள் அனைத்தும் இன்று மறக்கப்பட்டு விட்டனவா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

அமெரிக்க எழுத்தாளரான அடம் ஹொக்ஷில்லினால் எழுதப்பட்ட ‘லியோபோல்ட் அரசனின் ஆவி’ என்ற நூலின் வெளியீடு பழைய காயங்களை மீளவும் திறந்திருக்கிறது. பெல்ஜியம் நாட்டிலே அதிகமாக விற்பனையாகும் நூல்களில் இது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தாலும் கூட, பெல்ஜியத்தில் வாழுகின்ற வயது முதிர்ந்த காலனித்துவவாதிகளுக்கும் ஒரு சில வரலாற்றாசிரியர்களுக்கும் இந்த நூல் கடும் சீற்றத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

பெல்ஜியத்தின் காலனித்துவ காலத்தை விவாதிப்பதற்கு இதைவிட ஒரு பொருத்தமான காலம் இருக்கவே முடியாது. லியோபோல்டின் கொள்ளுப் பேரனான இரண்டாவது அல்பேட் இப்போது அங்கே அரசனாக இருக்கிறார்.( தற்போது 2020 ஆம் ஆண்டில், ஆல்பர்ட் 11 இன் மகன் பிலிப் அரசராக உள்ளார்,  மொ-ர் )

அவரது அரசமாளிகைக்கு வெளியே, தமது நாட்டின் பெரும்பான்மையான பிரச்சினைகளுக்கு ஆபிரிக்காவிலிருந்து வந்த வெள்ளையரல்லாத கறுப்பினக் குடியேறிகளே காரணம் என்ற கொள்கையுடைய விளாம்ஸ் பிரிவினர், அடுத்த மாதம் நடைபெறவிருக்கின்ற நாட்டின் தேர்தலிலே அதிகமாக வெற்றிபெறும் வாய்ப்பையுடைய கட்சிகளில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தப் பசுமை வீடுகளுக்கு மேலாக உயரப் பறந்து செல்லும் விமானங்கள் பிரசல்ஸை விட்டுப் புறப்படும் போது பல சந்தர்ப்பங்களில் ஆபிரிக்காவுக்கு பலவந்தமாகத் திருப்பியனுப்பப்படும் கறுப்பினத்தைச் சார்ந்த அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களைக் கொண்டிருக்கும். சில தருணங்களில் இவர்கள் நிர்வாணமாகவும்,இரத்தம் தோய்ந்த நிலையிலும் நாடுகடத்தப்படுகிறார்கள்.7 கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு;காலனிய பெல்ஜியத்தின் கறைபடிந்த கைகள்-தமிழில் ஜெயந்திரன்

கடந்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில், இருபது வயதுடைய ‘செமீரா அடமு’ என்ற நைஜீரியப் பெண், விமானத்தில் கொண்டு செல்லப்பட இருந்த வேளையில், பெல்ஜிய குடியேற்ற அதிகாரிகளால் தலை தலையணைக்குள் அமுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்தப் பெண்ணின் தலையை கீழே தள்ளிய நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் தமக்கிடையே சரளமாக உரையாடுவதையும் சிரித்து மகிழ்வதையும் அவர்களே எடுத்த ஒளிநாடாவில் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. இருபது நிமிடங்களில் அந்தப் பெண்ணை அவர்கள் கொலை செய்தார்கள்.

கொங்கோவை லியோபோல்ட் ஆட்சி செய்த வரலாறு, நீண்ட காலமாகவே அறியப்பட்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டு உதயமான போது, அமெரிக்க மற்றும் பிரித்தானிய எழுத்தாளர்களாலும் ஏனைய பரப்புரையாளர்களாலும் இவ்விடயங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

இவற்றின் காரணமாகவே லியோபோல்ட்  தனது சொந்த உடைமையாகவிருந்த கொங்கோ நாட்டை பெல்ஜிய அரசிடம் கையளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். இறப்பர் மற்றும் யானைத் தந்தம் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட பணத்தின் மூலம் தனது வருவாயை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற பேரவாவைக் கொண்டவரே லியோபோல்ட் என்ற புரிதலை ஏற்கனவே கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு ஹொக்ஷில்லின் இந்நூல், லியோபோல்ட் பற்றிய ஒரு புதிய பரிமாணத்தைப் புரிய வைத்துள்ளது.5 கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு;காலனிய பெல்ஜியத்தின் கறைபடிந்த கைகள்-தமிழில் ஜெயந்திரன்

கொங்கோ ஆற்றங்கரைகளில் அமைக்கப்பட்டிருந்த களஞ்சியங்களில் பணிபுரிந்த லியோபோல்ட் மன்னனின் அதிகாரிகள், அப்பிரதேசவாசிகள் வேலை செய்யத் தவறினால், அவர்களதும் அவர்களது பிள்ளைகளினதும் கைகளும், கால்களும் வெட்டப்படும் என்று பயமுறுத்தியே அவர்களிடமிருந்து வேலை வாங்கினார்கள். அரசனுக்கு இலாபத்தைப் பெறுவதற்காக பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆண்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. கிராமங்கள் எரியூட்டப்பட்டன.

மறக்கப்பட்ட இந்த மனிதப் படுகொலையில் பத்து மில்லியன் வரையிலான எண்ணிக்கையுடைய மக்கள் இறந்திருக்கலாம் என்ற ஹொக்ஷில்லின் கருத்து பெல்ஜிய வரலாற்றாசிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

இக்குற்றச்சாட்டினால் மிகவும் சீற்றமடைந்திருக்கும் கொங்கோவில் கடைசிக் காலங்களில் பணியாற்றி தற்போது மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் அதிகாரிகள், ஆக அறுவரது கைகளே வெட்டப்பட்டன என்றும் அதுவும் கொங்கோ நாட்டைச் சேர்ந்த படைகளாலேயே அது மேற்கொள்ளப்பட்டது என்றும் இணையத்தில் ஒரு செய்தியைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.3 கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு;காலனிய பெல்ஜியத்தின் கறைபடிந்த கைகள்-தமிழில் ஜெயந்திரன்

அண்மைக் காலங்களில் அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட செவ்விந்தியர்களதும் மற்றும் தென்னாபிரிக்காவில் போயர் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களதும் படுகொலைகளில் மட்டிலுள்ள கவனத்தைத் திசைதிருப்பவே அமெரிக்க மற்றும் பிரித்தானிய எழுத்தாளர்கள் இவ்விடயத்துக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள் என்று இவர்கள் வாதிடுகிறார்கள். ‘அவதூறுமிக்க ஒரு புத்தகம்’ என்ற தலைப்பில் வெளிநாடுகளுக்கான பெல்ஜிய அரச ஒன்றியம் வெளியிட்ட நூல் பின்வருமாறு கூறுகிறது: ”

ஹிட்லரும் ஸ்ராலினும் நிகழ்த்திய கொடூரங்களுடனோ அல்லது செவ்விந்தியர்கள், தாஸ்மேனியர்கள், அவுஸ்திரேலியாவின் பூர்வீக குடிகள் மட்டில் மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களுக்களுடனோ வேறு எதனையும் ஒப்பிட முடியாது. வரலாற்றை மாற்றி எழுத முனைகின்றவர்களுக்கும், நாவலாசிரியர்களுக்கும் தீனிபோடுவதற்காக, விவாதவாதிகளாலும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய எழுத்தாளர்களாலும் உருவாக்கப்பட்டதே இக்கறுப்புக் கட்டுக்கதை.”

குறிப்பிட்ட இந்தக் காலம் தொடர்பாக முன்னணியில் திகழும் வரலாற்றாசிரியரான ஜோன் ஸ்ரெங்கெஸ், “மோசமான விடயங்கள் நடந்து தான் இருக்கின்றன. ஆனால் ஹொக்ஷில் மிகைப்படுத்திக் கூறுகின்றார். இவ்வளவு மில்லியன் கணக்கிலான மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று சொல்வது அபத்தமான விடயமாகும். இந்த நூலுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இரண்டு, மூன்று வருடங்களில் இந்நூல் மறக்கப்பட்டுவிடும்.”  “இது ஒரு மோசமான ஆக்கம்” என்கிறார் லியோபோல்ட் சரிதையை எழுதிய பிரித்தானிய எழுத்தாளர் பார்பரா எமர்சன். லியோபோல்ட் ஒரு இனப்படுகொலையை ஆரம்பிக்கவில்லை.leopold ii boma laborers og கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு;காலனிய பெல்ஜியத்தின் கறைபடிந்த கைகள்-தமிழில் ஜெயந்திரன்

பணத்தின் மட்டில் பேராசை கொண்டவராக அவர் இருந்தார். விடயங்கள் கட்டு மீறியது போது அவர் அவற்றைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. பெல்ஜிய சமூகத்தின் ஒரு பகுதி இக்குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இவ்வளவு மோசமாக நாங்கள் இருக்கவில்லை. நாங்கள் கொங்கோவைச் சீர்திருத்தி அங்கு ஒரு நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்தினோம்.

முப்பது வருடங்களில் கொங்கோவின் சனத்தொகை கணிசமான அளவு சுருங்கியது என்பதை ஸ்ரெங்கெஸ் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் 1880 களில் கொங்கோவின் பரந்த காடுகளில் உண்மையில் எவ்வளவு மக்கள் வாழ்ந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது என்பதால் சரியான எண்ணிக்கையைக் கணக்கிடுவது இயலாத காரியமாகும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

 

நன்றி – த கார்டியன்