தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது-பீற்றர் இளஞ்செழியன்

தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு வாலிபர் முன்னணியின் பொருளாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினருமான பீற்றர் இளஞ்செழியன்  தெரிவித்துள்ளார்.

அவர் இதுதொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களின் தொகுப்பை இங்கு தருகிறோம்.

தற்போது கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே சாணக்கியன் இராகுல ராஜபுத்திரன் என்ற 2015ஆம் ஆண்டு வெத்திலை சின்னத்தில் போட்டியிட்ட ஒருவரை மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.ஆனால் அவர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி எந்தவொரு முன்மொழிவையும் செய்யவில்லை.FB IMG 1572159638829 தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது-பீற்றர் இளஞ்செழியன்

சாணக்கியன் என்பவரை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி சார்பில் தெரிவு செய்வதாக ஒரு செய்தி வந்திருந்தது. அதற்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் அணிக்கும் எந்தவித ஒரு தொடர்பும் இல்லை.

இதேவேளை சாணக்கியன் இலங்கை தமிழரசுக் கட்சியில் 2018 கிழக்கு மாகாணத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலிலே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தலைமை தாங்கிய கூட்டத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்களுக்கு பொன்னாடை போர்த்ததன் ஊடாக உள்வந்ததாக அறிய முடிகின்றது.

அதேவேளை 2019ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வவுனியாவில் தெரிவு நடைபெற்றன. அந்தத் தெரிவு நடந்த போது, வடக்கு முல்லைத்தீவு போன்ற இடங்களில் இருந்தவர்களுக்கு சாணக்கியனை எவரும் அறிந்திருக்கவில்லை.

ஆனால் இராசமாணிக்கம் அவர்களின் பேரன் என்பவர் இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி வேட்பாளராக நியமிக்கப்படுமிடத்து அதை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம்.sanakkiyan 1 தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது-பீற்றர் இளஞ்செழியன்

அதேவேளை அவர் உங்கள் கட்சியில் ஒரு வேட்பாளராக நியமிக்கப்படுவாராக இருந்தால், நான் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி, வாலிபர் அணியிலிருந்து பதவி விலகி சாதாரண உறுப்பினராகவே இருக்க விரும்புகின்றேன்.இது எனதுதனிப்பட்ட கருத்து.

தற்போதைய நிலைமையிலே வடக்கு கிழக்கிலே இளைஞர்களையும் போட்டியிட வைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் வாலிபர் முன்னணியானது இன்றைய நிலவரத்தின்படி கிழக்கு மாகாணத்திலே இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் சயோன் அவர்களை நாங்கள் அனைவரும் நியமிப்பதற்கு முன்வந்துள்ளோம்.

தமிழ் மக்களைக் கொன்று குவிக்க காரணமாக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸ, மகிந்த ராஜபக்ஸ, மைத்திரியுடன் இருந்த சாணக்கியன் இராகுல ராஜபுத்திரன் என்பவரை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் அதிகூடிய மாவீரர்களை தியாகம் செய்த மாவட்டம். அதிலே 2015இல் பிள்ளையான், கருணா, ஹிஸ்புல்லா போன்றவர்களுடன் இணைந்து போட்டிய சாணக்கியனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த செயல் கட்சிக்குள்ளேயே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான இராசமாணிக்கம் அவர்களின் பேரன் என்ற அடிப்படையிலே அவருக்கு ஆசனம் வழங்கப்படுமாயிருந்தால் அவர்  அவரின் வரலாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், இலங்கை தமிழரசுக் கட்சியுடனும் இருந்திருக்க வேண்டும்.

sanakkiyan2 தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களுடன் கூட்டுவைத்த சாணக்கியனை நாங்கள் ஏற்கமுடியாது-பீற்றர் இளஞ்செழியன்

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் செயற்பட்ட இளைஞர்களை புறக்கணித்து மகிந்த ராஜபக்ஸ, கோத்தபாயா ராஜபக்ஸ, மைத்திரி போன்ற சிங்களக் கட்சியுடன் செயற்பட்ட ஒருவரை எங்களின் கட்சியின் ஊடாக அதுவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி ஊடாக நியமிப்பது என்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எப்போதுமே சாணக்கியர் அல்லது இவர் போன்ற வழிப்போக்கர்களை கட்சியில் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதைத் தான் நாம் இன்றும் சொல்லியிருக்கின்றோம். இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தமிழ் மக்களின் உரிமைக்காவும், எங்களின் அபிலாசைகளுக்காகவும் போராடக்கூடிய ஒரு அமைப்பு.

2015ஆம் ஆண்டு இதே பட்டிருப்புத் தொகுதியிலே, இலங்கை தமிழரசுக் கட்சியை தோற்கடிக்க சிங்கள கட்சிகளுடன் கூட்டச் சேர்ந்த சாணக்கியன் போன்றவர்களை நியமிப்பதாக இருந்தால், அதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கிழக்கில் சாணக்கியனுக்குப் பதிலா இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சயோன் அவர்களை நியமிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.