தமிழரின் வாக்கினால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை , தமிழரின் அபிவிருத்தியை திட்டமிட்டு புறந்தள்ளி உள்ளது – மனோ

கடந்த காலங்களில் யுத்தம் காரணமாகவும், இனவாதம் காரணமாகவும் தமிழர்களின் வாழ்வு பல ஆண்டுகள் பின்நோக்கி திட்டமிட்டு கொண்டு செல்லப்பட்டு விட்டது. அவர்களுக்கு உரிய அபிவிருத்தி வாய்ப்புகள் தட்டி பறிக்கப்பட்டு விட்டன.

உதாரணமாக தமிழரின் பெரும்பான்மை வாக்கினால் உருவாக்கப்பட்ட கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சி, தமிழரின் அபிவிருத்தியை திட்டமிட்டு புறந்தள்ளி உள்ளது. கிழக்கின் தமிழ் கிராமங்களை பார்த்தாலேயே இது தெரியும். இது கிழக்கின் கசப்பான உண்மை.

அப்படியே மலையகத்தில் இருந்த, தூரப்பார்வை இல்லாத அரசியல்வாதிகளால், தோட்ட தொழிலாளர் வாழ்வும் பின்தங்க வைக்கப்படடது. இது பெருந்தோட்ட புறத்தின் கசப்பான உண்மை.

வன்னியிலும் நிலைமை இப்படித்தான்.

தமிழர்களுக்கு இன்று கிடைத்துள்ள இந்த அபிவிருத்தி வாய்ப்பையும் தட்டி பறிக்கும் குறுகிய மனப்பான்மையை மாற்றிக்கொள்ளும் போதே உண்மையான இன நல்லிணக்கம் உருவாகும்.