அரிசி வாங்குபவர்களா நீங்கள்? அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

அரிசிப் பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் நிறை குறைக்கப்பட்டுள்ளதால் சுப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்குபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் நேற்று முன்தினம் (05) கண்டியில் உள்ள Arpico மற்றும் Keellsகீல்ஸின் சுப்பர் மார்க்கெட்டுகளை ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சுப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் Keells,அரலிய, ஆசிரி ஆகிய பெயர்களில் விற்பனை செய்யப்படும் அரிசி மூடைகளில் தோராயமான எடையில் குறைப்பு உள்ளது, மேலும் இந்த உற்பத்தியாளர்கள் நிகர எடையை தவிர்த்து சட்டவிரோதமாக குறைந்த எடை மூலம் பொதியிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் துறையின் பொறுப்பாளர் துலித் அசோகா கூறுகையில், ‘உள்நாட்டு வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இதன்போது 5 கிலோ, 10கிலோ அரிசி மூடைகளே சோதனை செய்யப்பட்டுள்ளன.

இதன் போது குறித்த அரிசி மூடைகளில் இடப்பட்டுள்ள நிறை, அந்த மூடையை எடையிட்டு பார்க்கும் பொழுது மிகவும் குறைவாகவே காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் இம்முறை நாங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை மாத்திரமே விடுத்துள்ளோம், மீண்டும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.