வறுமையை எதிர்நோக்கி 60 மில்லியன் மக்கள்

33

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக உலகில் உள்ள மக்களில் 60 மில்லியன் பேர் மிகப்பெரும் வறுமை நிலையை எதிர்கொள்ளும் சாத்தியங்கள் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலகின் பொருளாதாரம் 5 விகிதத்தால் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கிறோம். பெருமளவான மக்கள் ஏற்கனவே வேலையிழந்துள்ளனர். வறிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிகம்.

பெருமளவான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிவடைந்துள்ளன. சுகாதாரத்துறையும் மிகப்பெரும் அழுத்தத்தில் உள்ளது என அதன் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஒருவர் நாள் ஒன்றிற்கு 1.9 டொலர்களுடன் வாழ்வதே மிகப்பெரும் வறுமையாக உலக வங்கி வரையறுத்துள்ளது.