யப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தெரிவு

10
5 Views

யப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தெரிவு செய்யப்பட்டுள்ளார். யப்பானின் நீண்ட நாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக பதவி விலகினார்.

இதனையடுத்து, ஆளும் மிதவாத கட்சியின் தலைவர் பதவிக்கு சுகாவுடன் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகரு இஷிபா மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா ஆகியோர் போட்டியிட்டனர்.

அந்நாட்டு பாராளுமன்ற மேல் சபை மற்றும் கீழ் சபை உறுப்பினர்கள் 534பேர் புதிய ஆளும் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். இதில் 377 ஓட்டுக்களை பெற்று யோஷிஹி சுகா பெரும் வெற்றியீட்டினார். சிகரு இஷிபா 68 வாக்குகளும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் 89 வாக்குகளும் பெற்றனர். 71 வயது நிரம்பிய யோஷிஹிடே சுகா வடக்கு யப்பானைச் சேர்ந்த ஸ்ரோபெரி பயிரிடும் விவசாயி மகன் ஆவார்.

மேலும் இவர் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளர் ஆவார். யப்பான் ஆளும் கட்சியின் தலைவர் பிரதமர் பதவி வகிப்பது வழக்கம். இதனால் யோஷிஹிடே சுகா அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையில் பதவி வகிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here