மெக்சிக்கோவில் இராட்சத எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

10

மெக்சிக்கோவில் விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக தோண்டிய போது இராட்சத எலும்புக்கூடுகளையும், சில மனித எலும்புக்கூடுகளையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இந்த எலும்புகள் 15000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தேசிய மானிடவியல் வரலாற்றுக் கழகத்தினர் தெரிவித்தனர்.

எதிர்கால விமான நிலையக் கோபுரம் அமைக்கப்படவுள்ள பகுதியிலேயே இந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பனியுக காலத்து விலங்குகளின் எலும்புக்கூடுகளை கண்டுபிடிப்பதில் தொல்லியல்துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேவேளை கொலம்பியாவில் மிகப் பெரிய விலங்கினங்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காட்டெருமை, ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றின் எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டுள்ளன.