கோ கோட்டா ஹோம் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் செயற்பாட்டாளர் கைது

இளம் செயற்பாட்டாளர் கைது

இன்று காலை  காவல்துறையினர் எனத் தங்களை அடையாளப் படுத்தியவர்களால் வீட்டிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட சிவில் உரிமை செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார தற்போது மோதரை  காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப் பட்டுள்ளார்.

இதேவேளை முன்னதாக அனுருத்த பண்டாரவை கண்டுபிடிக்க உதவுமாறு கோரி இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது.

தங்களை  காவல்துறையினர் என அடையாளப்படுத்தியவர்களால் அவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டார் எனினும் மோதரை  காவல் நிலைய பொறுப்பதிகாரி அவ்வாறு எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்தார் என ஊடகவியலாளர் அமைப்பு தனது கடிதத்தில் தெரிவித்திருந்தது.

எனினும் மோதரை காவல் நிலையத்தின் குற்றவிசாரணை பிரிவினரே தாங்களே அவரை சில வேளைக்காக அழைத்து சென்றனர் என அனுருத்த பண்டாரவின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மிரிஹானவில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நபர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, மிரிஹானவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Tamil News