எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் – இழப்பீடு கோரி மீனவ அமைப்புகள் மனுதாக்கல்

இலங்கைக் கடலில் மூழ்கிய, எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீட்டை செலுத்துமாறு கோரி மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 18 பேர் கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை அனைத்து மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண ரொசாந்த பெர்னாண்டோ உள்ளிட்ட தரப்பினர் நேற்று தாக்கல் செய்தனர்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக கப்பலுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுக்கும் சிங்கப்பூர், பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள், சுற்றாடல், மீன்பிடி மற்றும் துறைமுகம் ஆகியவற்றுக்கான அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.