இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள் குறித்து கிழக்கில் விசேட நடமாடும் சேவை

59 Views

இந்த மாத இறுதியில் கிழக்கு மாகாணத்தில் விஷேட நடமாடும் சேவை ஒன்று இடம்பெறவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு சென்று கிழக்கு மாகாணத்தில் மீண்டும் குடியேறியுள்ள மக்கள் மற்றும் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இந்த விஷேட நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை மையப்படுத்தி நடத்தப்படவுள்ளன.

இதேவேளை, தேசிய நல்லிணக்கம் தொடர்பான சகவாழ்வு குழு சகல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை நீதியமைச்சு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply