உலக எய்ட்ஸ் நாள்: வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்

வவுனியாவில் உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு

வவுனியாவில் உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு வாகன ஊர்வலம் இன்று இடம்பெற்றது.

உலக எயிட்ஸ் நாள் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவு கூரப்படுகிறது. அந்தவகையில் இலங்கையில் இம்முறை சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸ்சை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதனையடுத்து எயிட்ஸ்நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று  வவுனியா பொது வைத்தியசாலையின் மாவட்ட பாலியல் நோய்தடுப்பு தடுப்புபிரிவின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.

இந்த இவ்விழிப்புணர்வு ஊர்வலத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad உலக எய்ட்ஸ் நாள்: வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்