பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைக்கும் பணி ஆரம்பம்-அமைச்சர் அலி சப்ரி

நீதிமன்ற செயற்பாடுகளையும் ஆணைக்குழுக்களையும் அரசியலாக்காவிட்டால் சகல சட்டங்களையும் சிறந்த முறையில் செயற்படுத்த முடியுமென, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியல் நோக்கத்துக்காக பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும் அரசியல் அழுத்தங்களால், சட்டத்திலிருந்து குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதும் தவறானதே என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்விரு முறைமையும் மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் மாத்திரம் ஊழல் மோசடிகளை ஒழிக்க முடியாதென குறிப்பிட்ட அவர், இதற்கு நாட்டு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டம் மூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.