இனியும் தாமதிக்காமல் குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துங்கள் – ஜெனிவாவில் வலியுறுத்திய நாடு கடந்த அரசு

இலங்கை தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது இலங்கையை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் வீ.பி.லிங்கஜோதி வலியுறுத்தியுள்ளார்.

இன்று தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் 51 கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பிலான அறிக்கையின் போதே இந்நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

“இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை இதுவரை தீர்க்கமாக அணுகுமுறையில் செயல்படவில்லை என்று நாங்கள் நம்புகிறோம். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, இனப்படுகொலை இலங்கை பொறுப்புக் கூற வேண்டும்“ என்றும் தெரிவித்தாா்.

இலங்கை தொடர்பில் ஐ.நா 30/1, 46/1 தீர்மானங்களை கொண்டு வந்த போதிலும் இலங்கை எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை. செயற்படுத்துவதற்கான விருப்பத்தையே,நடைமுறைப்படுத்துவதற்கான சரியான திசையோ காட்டியிருக்கவில்லை எனவும்  அவர் சுட்டிக்காட்டினாா்.

போரின் போது படுகொலைக்கும், வலிந்தும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான நீதி தேடும் தமிழர்கள் தேடும் முயற்சியில் விரக்தியும் மட்டும் அடையவில்லை, தமிழ்மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விரக்தி அடைந்துள்ளனர் என அவா் தனது உரையில் மேலும் தெரிவித்தாா்.

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாக தமிழர் நிலங்கள் தொடர்ந்து இலங்கை ஆயுதபடைகளுடன் பாதுகாப்புடன் தொடர்ந்து அபகரித்தும், சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும் வருகின்றது. இலங்கை அரசாங்கத்துக்கும் மேலும் மேலும் காலஅவகாசம் கொடுக்காமல், விரைந்து செயற்படுமாறு சபையினைக் கேட்டுக்கொள்வதோடு, தமிழர்களுக்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் அவா் தெரிவித்தாா்.

இலங்கையை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வேண்டுகிறோம். தாமதிக்கப்படட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடும் எனவும் அவா் தெரிவித்தார்.