பேச்சு சுதந்திரத்தையும் ஊடகங்களையும் முடக் கக்கூடும் என்று விமர்சகர்கள் கூறும் ஒரு மசோதாவை மலைதீவின் ஜனாதிபதி முகமது முய்சுவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தததைத் தொடர்ந்து, மாலைதீவில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு முக்கிய பத்திரிகையா ளர் சங்கம் இந்த மசோதாவை நிராகரிப்பதாக கடந்த புதன்கிழமை (17) தெரிவித்துள்ளது, அதேநேரத் தில் பிரதான எதிர்க்கட்சி போராட் டங்களுக்கு அழைப்பு விடுத்துள் ளது மற்றும் உலகளாவிய பத்தி ரிகை சுதந்திரக் குழு முய்சுவை சட்டத்தை வீட்டோ செய்ய வலியுறுத்தியுள்ளது.
பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஆன் லைனிலும் ஆஃப்லைனிலும் எதிர்ப்புகளை அடக்க முயற்சி க்கம் ஒரு மசோதாவை மாலத் தீவு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது, அரச நிர்வாகக் கிளையால் ஊடகங்கள் கைய கப்படுத்தப்படுவதை எதிர்த்து நாங்கள் பத்திரி கையாளர்கள் ஒன்றாக நிற்போம் என்று நாட்டின் மிகப்பெரிய ஊடக ஊழியர்களின் சங்கமான மாலத்தீவு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அகமது நயீஃப் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாலத்தீவு ஊடக மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை மசோதா என்று அழைக் கப்படும் இந்த சட்டம், ஒளிபரப்பு மற்றும் இணையத்தள மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையிடவும் “கருத்து சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்கவும்” ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க மட்டுமே முயல்கிறது என்று முய்சுவின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப் படும் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகள் இந்த சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படவில்லை, இது “தெளிவான தரநிலைகள் மற்றும் நடத்தை விதிகளை” நிறுவும் என்றும், தவறான தகவல் மற்றும் ஒருங்கிணைந்த உள்ளடக்க கையாளுதல் ஆகியவற்றின் சவால்களை நிவர்த்தி செய்யும்” என்று வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் ஓ இல் தெரிவித்துள்ளார்.
500,000 மக்களைக் கொண்ட தீவு நாடான மாலத்தீவில் இந்த சர்ச்சை பதட்டங்களை அதி கரித்துள்ளது, 2008 ஆம் ஆண்டில் இடம்பெற தேர்தல் மூலம் 30 ஆண்டுகால ஒரு நபர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததிலிருந்து அதன் ஜனநாயகத்தை வலுப்படுத்த மாலைதீவு போராடி வருகிறது.
அண்மையில் சமூக ஊடகத்தளங்களை தடை செய்த நேபாளத்தின் ஆட்சியை அங்கு ஏற்பட்ட போராட்டம் அகற்றியதை போல மாலைதீவிலும் போராட்டங்கள் இடமட்பெற லாம் என்ற அச்சங்கள் ஏற்பட்டுள்ளது.