ஜப்பானின் முயற்சிகள் வெற்றி பெறுமா?-இதயச்சந்திரன்

ஆசியாவில் சீனாவிற்கு எதிரான அணிசேர்ப்பில், குவாடில் (QUAD)அங்கம் வகிக்கும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா வந்த ஜப்பானிய பிரதமர், சீனா-ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரள வேண்டிய அமெரிக்காவின் தேவையைக் கூறினார். ஆனால் இந்தியா அதற்குப் பதிலளிக்கவில்லை.SCO மாநாட்டிற்கு ஜூலையில் இந்தியா வருகிறார் சீன அதிபர்.

அங்கு எல்லைப்பிரச்சினை பேசப்படுமா?. ரூபாய்- யுவானில் இருதரப்பு வர்த்தகம் குறித்தான இணக்கம் ஏற்படுமா?. அல்லது QUAD மீதான சீனாவின் அதிருப்தி பற்றி விவாதிக்கப்படுமா? .  இவைகளும் இருதரப்பின் நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்படலாம்.

அதாவது ஷாங்காய் கூட்டமைப்பில் (SCO)பேசப்படும் சகல விடயங்களையும் ஜப்பான் உன்னிப்பாக அவதானிக்கும் என்று கணிப்பிடலாம்.

QUAD என்பதும் ஒரு வகையில் BRI போன்ற Regional Connectivity திட்டந்தான்.

தற்போது அமெரிக்க டொலர் கடன் பத்திரங்களை அதிகம் (1 ரில்லியன்) வைத்திருப்பது ஜப்பான்.சீன உட்பட பல நாடுகள் இப்பத்திரங்களை விற்கத் தொடங்கியுள்ளன.டொலர் index உம் வீழ்ச்சியடைகிறது.

அதேவேளை தம்மிடமுள்ள Bond களை விற்றால் அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாகலாம் என்கிற பயம் ஜப்பானுக்கு.

இந்திய உட்பட பல நாடுகள் டொலரின் வர்த்தகம் செய்யாமல் தமது சொந்த நாணயத்தில் செய்ய ஆரம்பித்திருப்பதால் டொலரில் உள்ள சொத்துக்களுக்கும், அந்நிய செலாவணிக் கையிருப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகள் அச்சமடைகின்றன.

1944 இல் டொலரை மையப்படுத்திய உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உருவாக்கம் இடம் பெற்றது. டொலரிற்கு ஆபத்து ஏற்படுகையில், இந்த நிதிமையங்களும் ஆட்டங்காணும்.அதனை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகக் கணிக்கப்படும் ஜப்பானும் கவலையுடன் கவனிக்கும்.

மேற்குலகின் அரசியல், பொருளாதார, படைத்துறை ஆதரவு இருந்தாலும், ஆசியாவில் தனக்கான ஆதரவு நாடுகளைத் திரட்ட வேண்டிய அவசியம் ஜப்பானிற்கு உண்டு.

‘தென்சீனக்கடல் பிராந்தியத்தில் சீன விரிவாக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம்’ என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி, தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளோடு இணைய முயற்சிப்பது போன்று, இந்துசமுத்திரப் பிராந்திலும் அதே சீன விரிவாக்கத்தைக் காட்டி இந்தியாவுடன் அணிசேர ஜப்பான் துடிக்கிறது.

இந்தியாவிலிருந்து திருக்கோணமலைக்கு எண்ணெய் குழாய் போடுவதன் ஊடாகவோ அல்லது இலங்கைக்கு நிதிஉதவி அளிப்பதன் மூலமோ இந்தியா-ஜப்பான்- இலங்கை என்கிற பிராந்திய இணைப்பினை உருவாக்கிவிட முடியுமென ஜப்பான் நினைக்கிறது.

அந்த நினைப்பு குறுகிய கால ஆயுள் கொண்டது என்பதனை மத்திய கிழக்கில் நடக்கும் மாற்றங்கள் புரிய வைக்கும்.அது பற்றி அடுத்த பத்தியில் பார்ப்போம்.

Leave a Reply