ஹிஷாலினியின் மரணத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்; ரிஷாத் பதியுதீன்

155 Views

பாராளுமன்றம் 1 ஹிஷாலினியின் மரணத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்; ரிஷாத் பதியுதீன்ஹிஷாலினியின் மரணம் 31 வயதில் புற்றுநோயால் மரணமான எனது தங்கையின் மரணத்துக்கு நிகரானது. அவரை இழந்தபோது அடைந்த துன்பத்தையும் வேதனையையும் ஹிஷாலினியின் மரணத்திலும் அடைகின்றோம். எனவே ஹிஷாலியின் மரணத்தில் எவராவது குற்றவாளியாக காணப்பட்டால் அவர்களை தராதரம் பாராது தண்டிக்க வேண்டுமென இந்த உயரிய சபையில் வேண்டுகின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஹிஷாலியின் உயிரைப் பாதுக்காக போராடிய எனது மாமனாரும் சிறையில். ஒவ்வொருநாளும் வைத்தியசாலை சென்று தனது மகளைப் போன்று ஹிஷாலியின் உயிரைப் பாதுகாக்க மருத்துவர்களிடம் மன்றாடிய எனது மனைவியும் சிறையில், கடந்த ஒன்றரை வருடங்களில் மிகப்பெரும் துன்பங்களை அனுபவிக்கும் அரசியல் வாதியாக நானும் எனதும் குடும்பமுமே உள்ளது என்றும் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் கீழான கட்டளைகளும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நான் 102 நாட்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலையில் எனது தங்கை ஹிஷாலின் எனது வீட்டில் தீ மூட்டி மரணித்த சம்பவம் தாளாத துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது சகோதரி ஒருவர் அவரின் 31 ஆவது வயதில் புற்று நோயால் மரணமானபோது அடைந்த துன்பத்தையும் வேதனையையும் ஹிஷாலினியின் மரணத்திலும் நானும் எனது குடும்பமும் அடைகின்றோம்.

ஹிஷாலினி 16 வயது பூர்த்தியடைந்த நிலையிலேயே எனது வீட்டுக்கு ஒருவர் மூலமாக வந்தார். அப்போதும் நான் சிறையில் தான் இருந்தேன். அப்போது ஹிஷாலினியின் வயது எண்ணேவென தரகரிடம் கேட்டபோது 17 வயது என அவர் கூறியுள்ளார். அவருக்கு எனது வீட்டில் 7தர 6 ஆதி கொண்டஇணைந்த மலசலகூடட வசதியுடனான அறை வழங்கப்பட்டது. இந்த அறையிலேயே இதற்கு முன்னர் பணி புரிந்தவர்களும் இருந்தனர்.

சமபவம் நடந்த 3 ஆம் திகதி கால 6.45 மணியளவில் சகோதரி ஹிஷாலினியின் சத்தம் கேட்டு அப்போது அதிகாலை தொழுகை முடித்து விட்டு தூங்கிக் கொண்டிருந்த எனது மாமனாரும் மாமியும் ஓடி வந்து பார்த்தபோது அவர் தீயில் எரிந்து கொண்டிருந்துள்ளார். உடனடியாக அவரை காப்பாற்ற போராடிய எனது மாமனார். ஒரு காபட் மூலம் தீயை அணைத்ததுடன் உடனடியாக அருகில் இருந்த தண்ணீர் தொட்டியினுள் அவரை இருத்தியுள்ளார். அப்போது அவர் கூல் தண்ணீர் கேட்கவே உடனடியாக தனையும் வழங்கியதுடன் அவசர அம்புலன்சுக்கு காலை 7.05 மணிக்கு அறிவித்துள்ளார். அம்புலன்ஸ் மூலம் 7.33 மணிக்கு ஹிஷாலினி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதிவுகள். தொலைபேசி அழைப்பு பதிவுகள் உள்ளன. ஆனால் பொலிஸார் காலை 8.35 மணிக்கு தான் நாம் ஹிஷாலினியை வைத்தியசாலையில் சேர்த்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக அறிகின்றேன்.

ஹிஷாலினி வைத்தியசாலையில் ணனுமதிக்கப்ட்ட நாள் முதல் எனது மனைவி தினமும் வைத்திய சாலை சென்று ஹிஷாலினியின் உயிரைப் பாதுகாக்காக போராடினார், மன்றாடினார். ஹிஷாலினிக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிங்கப்பூரிலிருந்து தோல் 7 ரூபா மருத்துவர்கள் செலவுகளையும் நான் ஏற்கின்றேன். ஹிஷாலினியை காப்பாற்றுங்கள் என என் மனைவி கூறியுள்ளார். ஹிஷாலினி தீமூட்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் உடனடியாக தாயாருக்கு அறிவித்தது அவரை வரும்படியும் தான் தருவதாகவும் எனது மனைவி கூறியுள்ளார்.

ஹிஷாலினி மிகவும் பண்பானவர். அவரின் தாயாரும் மிகவும் நல்லவர். ஆனால் தற்போது அரசியலில் வங்குரோத்தில் உள்ள சிலரும் ஒருசில ஊடக விபசாரிளும் அந்த தாயாரையும் உறவினர்களையும் தவறாக வழி டத்துகின்றனர். ஹிஷாலினி வேலைக்கு வந்த இரு தினங்களிலேயே அவரின் தாயார் கேட்டு 40000 ரூபா கொடுத்தோம். அதையடுத்து ஏழரை மாதங்களில் மட்டும் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு மேல் வழங்கினோம். நாம் உண்ணும் உணவுகளையே ஹிஷாலினிக்கும் வழங்கினோம். எனது சகோதரி, தங்கை போலவே ஹிஷாலினியை நடத்தினேன். எனது வீட்டில் ஹிஷாலினிக்கு எந்த அசிங்கமும் இடம்பெறவில்லை என்பதனை உறுதியாக கூறுகின்றேன்.

ஹிஷாலியின் உயிரைப்பாதுக்காக போராடிய எனது மாமனாரும் சிறையில். ஒவ்வொருநாளும் வைத்தியசாலை சென்று தனது மகளைப்போன்று ஹிஷாலியின் உயிரைப் பாதுகாக்க மருத்துவர்களிடம் மன்றாடிய எனது மனைவியும் சிறையில். நீண்ட காலத்துக்கு பின்னர் தனது ஊரிலிருந்து வந்திருந்த எனது மைத்துனரும் சிறையில். இப்போது எனது இரு சிறிய மகள்கள் மட்டும்தான் வெளியே இருக்கின்றார்கள். அவர்களையும் சிறையில் போடப்போகின்றீர்களா?

தமது ஊடக் நிறுவனத்திற்கு தலைப்பு செய்தி வேண்டும் என்பதற்காக ஊடக நிறுவனமொன்று அந்த தாயாரை தவறாக வழி நடத்துவதுடன் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டி விடுகின்றது. எம்பி. ஒருவர் தனது தொலைபேசியில் ஒரு குறும் செய்தியை காட்டினார்.அதில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு ஒரு ஊடகவியலாளர் சிலருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

எனவே எனவே ஹிஷாலியின் மரணத்தில் எவராவது குற்றவாளியாக காணப்பட்டால் அவர்களை தராதரம் பாராது தண்டிக்க வேண்டுமென இந்த உயரிய சபையில் வேண்டுகின்றேன். விசாரணைகள் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்பட வேண்டுமென இங்குள்ள அமைச்சர் சரத் வீரசேகரவிடமும் அரசிடமும் கோருகின்றேன். ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க நானும் எனது குடும்பமும் எமது முழு ஒத்துழைப்புக்களை வழங்குவோம்” என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply