சாந்தன் எப்போது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவாா்?

223 06 சாந்தன் எப்போது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவாா்?
மருத்துவமனையில் நேற்று பாா்வையிட்ட சகோரனுடன் சாந்தன்

சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்று வரும் சாந்தன் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்பவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சென்னையிலிருந்து கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

அவா் இலங்கை திரும்புவதற்கான அனுமதி இரண்டு அரசுகளாலும் வழங்கப்பட்டு பயண ஆவணங்களும் கொடுக்கப்பட்டுவிட்ட போதிலும்கூட, அவா் குறித்த சில ஆவணங்களும், பொருட்களும் திருச்சி சிறப்பு முகாமில் உள்ளன.

வார இறுதி விடுமுறை தினங்கள் வருவதால் திங்கட்கிழைமைக்குப் பின்னரே அவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனத் தெரிகின்றது. அதனால், அடுத்த வாரம் அவா் இலங்கை திரும்புவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிகின்றது.