இலங்கை அரசியலில் முக்கியமான சில சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றிருக்கின்றன. அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவற்றின் பின்னணியிலுள்ள அரசியல் நகர்வுகள் என்ன என்பது தொடர்பில் பிரபல அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் “உயிரோடை தமிழ் வானொலி”யின் தாயகக் களம் நிகழ்வில் இந்த வாரம் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.