குஜராத் மாநிலம்- தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 132 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

பாலம் இடிந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளனர். பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருக்கும் காணொலிகள் வெளியாகியுள்ளது.

அந்த நேரத்தில் 400 பேர் கட்டிடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் இந்த சம்பவம்  நடந்திருக்கிறது.