ஊடகவியலாளர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் – வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம்

311 Views

ஊடகவியலாளர் மீதான தாக்குதலை

மிரிஹான பெங்கிரிவத்தை பகுதியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலையும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதையும் வன்மையாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கண்டிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அரசாங்கத்திற்கு  எதிராக மிரிஹான பெங்கிரி வத்தை பகுதியில் ஐனாதிபதி கோட்டாபய ராஐபக்சவின் இல்லத்திற்கு செல்லும் வழியில் நேற்று முன்தினம் தீடிரென திரண்ட மக்கள் நாட்டில் பொருட்களின் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு, நீண்ட நேர மின் வெட்டு, பொருளாதார வீழ்ச்சி ஆகிய விடயங்களை கண்டித்தும் ஐனாதிபதியை பதவி விலகுமாறும் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் அவர்களின் கேமரா உட்பட உபகரணங்கள் சேதமாக்கப்பட்டும் ஊடகவியலாளர்கள் சிலர்  ஊடக அடையாள அட்டை காட்டப்பட்ட போதும் கைது செய்யப்பட்டனர்.

ஜனநாயக ரீதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இராணுவத்தினராலும் காவல்துறையினராலும் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனத்தை எமது சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

இச்சம்பவம் இன்று நேற்று அல்ல நல்லாட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும் தொடர்ந்து இடம் பெறுகிறது. இதனை சர்வதேச ஐனநாயக வாதிகளுக்கு தெரியப்படுத்துவதோடு இந்த அரசிடமும் தெரியப்படுத்துகிறோம். எமது பாதுகாப்பை உறுத்திபடுத்துமாறுமாறு சர்வதேசத்திடமும் இலங்கை கோட்டாபய ராஜபக்ச அரசிடமும் கோரிக்கை விடுக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply