13 ஆவது திருத்தத்தை நிராகரிப்போம் ; முல்லைத்தீவை நோக்கி வாகன பவனி

603 Views

13 ஆவது திருத்தத்தை நிராகரிப்போம்

ஒற்றையாட்சிக்கு உட்பட 13 ஆவது திருத்தத்தை நிராகரிப்போம் என்பதை வெளிப்படுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட வாகன பவனி இன்று காலை வவுனியா நகரில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவு நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

அதனையடுத்து முல்லைத்தீவிலிருந்து, கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 கட்சிகள், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இந்தியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் யாழ்ப்பாணம் நல்லூரடியில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 இற்கு மாபெரும் பேரணி ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்னேற்பாடாகவே இன்றைய பவனி இடம்பெற்றது.

Tamil News

Leave a Reply