“13 ஆவது திருத்தம் தொடர்பில் எங்களுடனேயே பேச வேண்டும்”- அரசாங்கம்

எங்களுடனேயே பேச வேண்டும்

13 ஆவது திருத்தம் தொடர்பில் பிரச்சனைகள் இருந்தால் இந்தியாவுடன் பேசாது எங்களுடனேயே பேச வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பிலவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை என்பது இந்தியாவின் காலனித்துவ நாடு அல்ல. இதனால் பிரச்சனைகள் இருந்தால் இங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்துடனேயே பேச வேண்டும். இதனை விடுத்து இந்தியாவுடன் பேச வேண்டிய அவசியமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.