நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (14) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நாளை (15) வியாழக்கிழமை அதிகாலை 1.00 மணி வரை இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான, உள்ளூர் ரீதியான பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.
மின்னல் தாக்கம் தொடர்பான அபாயங்களையும் சேதங்களையும் குறைக்கத் தேவையான போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



