போர் பதற்றம் : மத்திய கிழக்கு விமானப் பயணங்கள் அனைத்தும் இரத்து

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இன்றைய தினமும் (2) இரத்து செய்யப்பட்டுள்ளன.

யுத்தம் ஆரம்பமான 28ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவிருந்த 115 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை சீராகும் வரை பயணிகள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.