ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் மற்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் மத்திய கிழக்கில் போர் தணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதே நேரத்தில், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாத நிலை ஏற்படும் வரை போர்நிறுத்தம் ஏற்படக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கான்பெராவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஆல்பனீஸ் பேசுகையில், “உலகம் அமைதியை விரும்புகிறது… இதில் சம்பந்தப்படாத வளைகுடா நாடுகளும், சுற்றுலாப் பகுதிகளும் கூடத் தாக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம்,” என்றார்.
சனிக்கிழமை தொடங்கிய ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



