இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பலர் பலி

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலை ஞாயிறன்று வெடித்துள்லது. அதிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பு வழிந்தோடியதோடு, கரும்புகையும் அப்பகுதியை சூழ்ந்துள்ளது. எரிமலை வெடிப்பால் அருகிலுள்ள கிராமங்களில் பல கிலோமீட்டருக்கு சாம்பல் நிரம்பியுள்ளது. 4 கிமீட்டர் தூரம் வரை பாறைகள் வெடித்துச் சிதறியதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.