வன்முறை தீர்வாகாது, அமைதியாக போராட்டத்தை நடத்துங்கள்-அமெரிக்க தூதுவர் வலியுறுத்தல்

வன்முறை ஒரு போதும் தீர்வாக அமையாது எனவும் போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு இடம் மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு நினைவூட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குழப்பமும் பலமும் பொருளாதாரத்தை சரி செய்யாது அல்லது இலங்கையர்களுக்கு தற்போது தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply