வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கும் முகமாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி ,பொது மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பிலிருந்து ஆரம்பித்த பேரணியானது விகாரைவரை சென்று பிரதான வாசலில் போராட்டம் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டவர்களால் எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு ,மக்கள் வெளியில் புத்தர் வெளியில் , எங்களை நிம்மதியாக வாழ்விடு போன்றகோசங்கள் எழுப்பி யிருந்தார்கள் இப்போராட்டத்தில் தபிழ்தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.