மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்

261 Views

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 81 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று  மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், நாங்கள் நாட்டை துண்டாடவோ தனியரசையோ கேட்கவில்லை என்றும் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஓலைத்தொடுவாய் பகுதியில் உள்ள பெண்கள் ஆண்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply