இந்திய வீடமைப்பு திட்டத்தை பார்வையிட்ட இந்திய துணை ஜனாதிபதி!

நுவரெலியா, இராகலை, லிடஸ்டேல் தோட்டப் பகுதியில் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் (மூன்றாம் கட்டம்) நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை இன்று திங்கட்கிழமை (20) இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் பார்வையிட்டதோடு, பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த வீடமைப்பு திட்டம் இலங்கையின் மலையகப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்திட்டம், குடியிருப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமைகிறது. இந்தியா–இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகவும் இது கருதப்படுகிறது.