வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிப்பு

மதுரோ மற்றும் அவரது மனைவி

வெனிசுவேலா மீது அமெரிக்கா ‘பெரிய அளவிலான தாக்குதலை’ நடத்தியதாகவும், ‘அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்’ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க இராணுவத்தின் டெல்டா படையால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் இருக்கும் இடம் மற்றும் தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.

அதேசமயம், மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில், மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார்.

மதுரோ மீது “போதைப்பொருள்-பயங்கரவாத சதி, கொக்கைன் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல், அமெரிக்காவிற்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி” ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.