வவுனியா வீர வீராங்கனைகள் கராத்தே போட்டியில் வெற்றி

272 Views

கராத்தே போட்டியில் வெற்றி

கராத்தே போட்டியில் வெற்றி

வடக்கு கிழக்கு மாகாண  ரீதியாக நடாத்தப்பட்ட கராத்தே போட்டியில் வவுனியா வீர வீராங்கனைகள் வெற்றி பெற்று  பதக்கங்களை தமதாக்கி கொண்டுள்ளனர். 

இலங்கை கராத்தே சம்மேளத்தினால்   வடக்கு கிழக்கு இரு மாகாணங்களும்  இணைந்து நடாத்திய கராத்தே சுற்றுப்போட்டி இன்றையதினம் (02) திருகோணமலை makaizer indoor stadium இல் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

IMG 20220402 WA0024 வவுனியா வீர வீராங்கனைகள் கராத்தே போட்டியில் வெற்றி

இப்போட்டியில் வவுனியாவை சேர்ந்த 11 வீரர்கள்  பங்குபற்றியிருந்தனர்.  இப்போட்டியில்  வவுனியா dinesh martial arts school வீர வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்து வவுனியா மண்ணிற்கு பெருமையை சேர்த்துள்ளனர்.

இவ் கழகத்தின் தலைமை ஆசிரியராக sensei t.b dinesh (5th dan) அவர்களின் மேற்பிரிவு மாணவர்களும் துணைக் கழகத்தின் பயிற்சி ஆசிரியரான sensei g.gnanakeethan (3rd dan) அவர்களின் மாணவர்களும் பதங்களை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply