வடமாகாணத்தில் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும்  தடுப்பூசி

20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும்

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் தடுப்பூசியானது 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதிசெவ்வாய் கிழமை முதல் வழங்கப்படஉள்ளதாக .மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது…

தடுப்பூசிவழங்கும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அப் பிரதேசத்திற்குரிய சுகாதாரவைத்திய அதிகாரியினால் வெளியிடப்படும்.அவ்வாறு அறிவிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில்30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படும்.

20 தொடக்கம் 30 வயதிற்குஉட்பட்டவர்கள் அனைவரும் தமது அடையாள அட்டை போன்ற உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 2ம் ஆம் திகதி சனிக்கிழமைகளில் காலை 8.00 மணிமுதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதாரவைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற் குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவதுஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ளமுடியும்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021