கடலுக்குச் சென்ற மீனவரை  ஏழு  நாட்களாகியும் காணவில்லை

418 Views

ஏழு  நாட்களாகியும் காணவில்லை

திருகோணமலை குச்சவெளி, ஜாயா நகரை சேர்ந்த மீனவர் ஒருவர் அட்டை பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றவர் ஏழு நாட்களாகியும் காணவில்லை எனக் கூறப்படுகின்றது.

சென்ற திங்கட்கிழமை குச்சவெளியிலிருந்து புறப்பட்டு, பருத்தித்துறை குடாரப்பு சென்று அங்கியிருந்து 30 மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் அட்டைப் பிடிப்பதற்குச் சென்றவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவருடன் படகு  ஓட்டுநரும் போயுள்ளார். அட்டைப் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றவர் குறிப்பிட்ட நேரமாகியும் மேலே வராததனால் படகு ஓட்டுநர் அவர் கொண்டு போன கயிற்றை இழுத்துப் பார்த்துள்ளார். சுழி ஓடிய வரைக் காணவில்லை

இன்றுடன் (18) ஏழு நாட்கள் கடந்தும் இதுவரை அவரைக்காணவில்லை. இது சம்பந்தமாக உறவினர்கள் பருத்தித்துறை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதோடு, கடற்படையினர் மற்றும் மீனவர்கள் தேடியும் இதுவரை அவரைக் காணவில்லை. 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

Leave a Reply