333 Views
இலங்கை வருகிறார் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலர்
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலர் விக்டோரியா நொலண்ட் இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பசுபிக் கூட்டமைப்பிற்கு, அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பங்களாதேஷ், இலங்கை மற்றும் புதுடெல்லியில் உள்ள வெளியுறவு தரப்பினருடன் ஆலோசனைகளை மேற்கொள்வார்.இந்த விஜயங்களின்போது, அவர் தலைமையிலான தூதுக்குழவினர், சிவில் சமூகம் மற்றும் வர்த்தக தலைவர்களையும் சந்தித்து பொருளாதார கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.