இந்தியாவையடுத்து சீனாவிடம் கடன் கோரிய இலங்கை

சீனாவிடம் கடன் கோரிய இலங்கை

சீனாவிடம் கடன் கோரிய இலங்கை

இந்தியாவிடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடன்களை செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பிலும்,அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான கடன் உதவி குறித்தும் இலங்கை சீனாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வருடம் சீன வங்கிககளிற்கு இலங்கை 100 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக செலுத்தவேண்டும்.

ஆனால் நாடு தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளும் வரை இந்த கடன்களை செலுத்துவதை ஒத்திவைக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸைச் சந்தித்தார்.

அண்மையில் முடிவடைந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவிய பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஆதரவை இரு முக்கியஸ்தர்களும் வெகுவாகப் பாராட்டியதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.