எரிசக்தி துறை சீர்திருத்தங்கள் குறித்து இலங்கையுடன் அமெரிக்கா கலந்துரையாடல்

எரிசக்தி துறை சீர்திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் தெற்காசியாவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்.எம்.எலீன் லௌபச்சர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர் இன்று காலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவை சந்தித்தனர்.

எரிசக்தி துறை சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தற்போதைய சவால்கள் மற்றும் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்த அரசாங்க திட்டங்கள் குறித்து இரு பிரிவினரும் கலந்துரையாடியுள்ளனர்.

குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையான ஆற்றல் வழங்கல் பொருளாதார மீட்சிக்கு முக்கியமானது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எரிசக்தி மற்றும் காலநிலை இலக்குகளை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியும் என்பது தொடர்பில், புதுப்பிக்கத்தக்க வளங்களின் அபிவிருத்திக்கான தற்போதைய பங்காளித்துவங்கள் மற்றும் ஆதரவு
தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.