இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் செயற்பாட்டிற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் உறுதியளித்துள்ளார்.
பாரிஸ் கிளப் கோட்பாடுகளுக்கு இணங்க நிதியுதவி உறுதிமொழிகளை நீட்டிக்க திறைசேரி செயலாளர் ஆதரவை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
, இவற்றுக்கு மேலதிகமாக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அமெரிக்க முகவரமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் அவர் ஆதரவை வழங்கியுள்ளார்.