யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது நினைவுதினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.
1996ஆம் செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் அவரை சித்திரவதை செய்த பின் படுகொலை செய்ததாக நீதி விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரைத் தேடிச் சென்ற, தாயார், சகோதரன் மற்றும் உறவினர் ஒருவரும் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.