இந்தியாவிடமிருந்து சிறந்த வர்த்தக ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் க்ரீர் தெரிவித்துள்ளார்.
“என்னுடைய குழு தற்போது புது டெல்லியில் உள்ளது. இந்தியாவில் சில மூலப் பயிர்கள் மற்றும் தயாரிப்புகள் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீங்கள் கூறுவதைப் போல அவர்களுடன் வர்த்தகம் செய்வது கடினம் என்பதை 100% ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவர்கள் முன்னோக்கி சிந்திக்கிறார்கள். அவர்கள் நம்முடன் விவாதிக்கும் முன்மொழிவு இதுவரை நாம் பெற்றதிலே சிறந்தது. இந்தியா ஒரு சாத்தியமான மாற்றுச் சந்தை என நினைக்கிறேன்.” என்றார்.



