ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான கேசி-135 விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும், இந்த விமானம் வீழ்த்தப்பட்டதில் எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான நட்பு நாடுகளின் தாக்குதலோ காரணமல்ல என்றும் முன்பு அமெரிக்கா கூறியது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகளில் இந்த எரிபொருள் நிரப்பும் விமானம் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு விமானங்களில் இது ஒன்று என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது.



